திருப்பூர், ஆக. 24:
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்ட செயலாளர் அப்துல்லாஹ் என்ற அப்துல் அக்கீம் மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.
முன்னான் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் கடந்த 2023 பிப்ரவரி மாதம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனந்து பொறுப்புகளிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்களால் நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், அதே பொதுக்குழு உறுப்பினர்களால் எஸ்.எஸ்.ஹாருன் ரசி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியையும் பெயரையும் பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாருண ரசீது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தமிமுன் அன்சாரி தொடர்ந்து கட்சியின் பெயரையும் கட்சியின் கொடியையும் பயன்படுத்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் வருகிற 1 ம் தேதி திருப்பூர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு உள்ளதாகவும், இதனால் திருப்பூரில் முக்கிய நகரங்களில் ராயல் ராஜா தலைமையில் கட்சியின் கொடி கம்பங்கள் நடும் பணி நடந்து வருகிறது.
இது கட்சியின் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பெயரையோ, கொடியையோ, பதாகைகளோ பயன்படுத்த அனுமதிக்க கூடாது. மேலும் தமிமுன் அன்சாரி தரப்பினர் தேவையற்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில் கட்சியின் கொடி மற்றும் பெயரை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். கட்சியின் கொடியை பயன்படுத்தும் பட்சத்தில் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..