ராமநாதபுரம், அக்.9-
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களின் சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெறக் கோரி அதிமுக சார்பில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் முனியசாமி , முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் பால்பாண்டியன் வரவேற்றார்.
இதில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சொத்து வரி உயர்வை திரும்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஒன்றிய செயலாளர் அசோக்குமார், முன்னாள் நகர் செயலாளர் வரதன், நகர் துணை செயலாளர் ஆரிப் ராஜா, நகராட்சி கவுன்சிலர் இந்திரா மேரி செல்வம், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வீரபாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி விருதுநகர் மண்டல துணைச்செயலாளர் வசந்த், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் நாகராஜன் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.