தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ராமநாதபுரத்தில் மனித சங்கிலி போராட்டம்
“வரி பயங்கரவாத திமுக அரசு பதவி விலக வேண்டும்” முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆவேசம்
போகலூர், அக்.9-
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களின் சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெறக் கோரி அதிமுக சார்பில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது.
மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக ராமநாதபுரம்
மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். மருத்துவர் அணி மாநில நிர்வாகி மற்றும் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன்,
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் நகர் செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும், பத்திர பதிவில் உள்ள ஆதிக்கம் விலக்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
போராட்டத்தில் முன்னிலை வகித்த முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசும்போது:
திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் வரி உயர்த்தப்படுகிறது. 202 ல் 56 சதவீதம் உயர்வு செய்து தற்போது மீண்டும் 6 சதவீதம் உயர்த்த போகிறோம் என்று சொல்லி மக்களை துன்புறுத்தும் ஆட்சி நடக்கிறது. இந்த வரி பயங்கரவாத அரசை கண்டித்து மக்கள் நலன் கருதி இந்த மனித சங்கிலி போராட்டத்தை அதிமுக நடத்தி கொண்டு இருக்கிறது. வரி பயங்கரவாத திமுக அரசு பதவி விலக வேண்டும். 2026 தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி முதலமைச்சர் ஆக வர வேண்டும் அதற்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்,
என்று பேசினார்.
போராட்டத்தில்
ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், அவைத்தலைவர் முன்னாள் நகராட்சி சேர்மன் ராமமூர்த்தி,முன்னாள் நகர் செயலாளர் வரதன், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தஞ்சி சுரேஷ்குமார், நகர் துணை செயலாளர் ஆரிப் ராஜா, நகராட்சி கவுன்சிலர் இந்திரா மேரி செல்வம், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வீரபாண்டியன், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி விருதுநகர் மண்டல துணைச்செயலாளர் வசந்த், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் நாகராஜன் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.