கன்னியாகுமரி அக் 9
அஞ்சுகிராமத்தில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம் தலைமை தாங்கினார். தோவாளை யூனியன் சேர்மன் சாந்தினி பகவதியப்பன் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ் அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் ராஜபாண்டியன் ஒன்றிய விவசாய அணி செயலாளர் மேட்டுக்குடி முருகன் ஜெ.பேரவை செயலாளர் வாரியூர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மருகூர் பேரூராட்சி மன்ற தலைவர் லெட்சுமி சீனிவாசன் குலசேகரபும் ஊராட்சிமன்ற தலைவர் சுடலையாண்டி, பேரூர் செயலாளர்கள் மனோகரன் சீனிவாசன் மணிகண்டன் கவுன்சிலர்கள் ராமச்சந்திரன் காமாட்சி அஞ்சு கிராமம் பேரூர் அதிமுக அவைத் தலைவர் ஜீவா பேரூர் பொருளாளர் சுந்தரம்பிள்ளை கிளைச் செயலாளர்கள் ஆட்டோ பரமசிவன் சுந்தரம் நிர்வாகி அஞ்சை சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.