பூதப்பாண்டி – டிசம்பர்-01-
குமரி மாவட்டத்தில்நான்கு பக்கமும் நீர் வளம் கொண்ட குளங்கள், ஆறுகளின் நடுவில் நஞ்சை நிலத்தை முற்றிலுமாக அழித்து நஞ்சை நிலங்களுக்கு செல்லும் கிளை கால்வாய்கள், வரப்புகளை அழித்து உருவாக்கப்படும் வீட்டுமனைக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள்
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற விவசாய நஞ்சை நிலத்தை தரிசு நிலம் என சான்று கொடுத்த வேளாண்துறை அதிகாரிகளின் அவலத்தை கண்டித்தும் உடனடியாக விவசாய நஞ்சை நிலத்திற்கு கொடுக்கப்பட்ட வீட்டுமனை அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரியும் லஞ்சம் பெற்றுக்கொண்டு விவசாய நஞ்சைநிலத்துக்கு வீட்டு மனை அங்கீகாரம் கொடுத்த அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய கோரியும் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் தினகரன் தலைமையில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாஞ்சில் நாடு கண்முன்னே நாசமாகிறது அரசும், அரசு அதிகாரிகளும் லஞ்சப்பணம் பெற்றுக்கொண்டு கண்மூடி தூங்கும் அவலம்….!
அரசு புறம்போக்கு பாசன கிளை கால்வாய்களை தரைமட்டமாக்கி அழித்து அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாமல் சுற்றி வேலி அடைத்து சுற்று சுவர் கட்டி சட்டவிரோதமாக வீட்டு மனையாக மாற்றி வருகிறார்
விவசாய நிலத்திற்கு பரளியாறு மூலம் ஆற்று பாசனமும், சேனியற்குளம், பறையரடிகுளம், மேல செட்டிகுளம், கீழ செட்டிகுளம் ஆகிய குளங்களிலிருந்து பாசன கால்வாய்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் வருகிறது அப்படி இருக்கும்போது விவாசாயம் செய்ய ஏதுவான விவசாய நஞ்சை நிலத்தில்சட்டத்திற்கு புறம்பாக அரசின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி அரசு புறம்போக்கு பாசன கிளை கால்வாய்களை அழித்து தரைமட்டமாக்கி பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீட்டுமனை பிரிவாக மாற்றிவருகிறார்
ஒரு வீட்டுமனை பிரிவு அங்கீகாரம் பெறப்பட வேண்டும் எனில் தரிசு நிலமாக இருக்க வேண்டும், மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும், வேளாண்மை துறையில் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும்,பொது நீர் நிலைகளான வாய்க்கால், கால்வாய், குளம், ஏரி, ஆறு போன்றவை வீட்டுமனை பிரிவிற்கு அருகிலோ பக்கத்திலோ வரக்கூடாது மனைபிரிவாக மாற்ற படுகின்ற இடம் விவாசாயம் செய்ய ஏதுவான நிலமாக இருக்ககூடாது என சட்டம் தெளிவாக எடுத்துரைக்கின்றது இது குறித்து உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் அதை பலமுறை உறுதி செய்துள்ளது
மேற்படி நஞ்சை நிலமாகவும்3000 ஆயக்கட்டு நிறைந்ததாகும் வேளாண்மை நடத்த சிறந்த இடமாகும் மேற்படி வீட்டுமனை பிரிவிற்கு அருகில் மூன்று பக்கம் தற்போதும் வேளாண்மை நெல் விவசாயம் நடந்து வருகிறது,
விவசாயம் செய்யும் விவசாயிகளை விவசாயம் செய்யகூடாது எனவும் அருகிலுள்ள விவசாயிகள் நிலத்தை தனக்கு விற்க வேண்டும் என்றும் பலர் மிரட்டி வருவதாகவும்விவசாயிகள் பலர் விவசாய நிலங்க
இதனால் அருகில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையை சட்டவிரோதமாக உருவாக்கி அதன் மூலமாக அந்த விவசாய நிலத்தையும் வாங்கி வீட்டு மனை பிரிவாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்.
ஒரு வீட்டுமனை பிரிவு அங்கீகாரம் பெற அந்த நிலத்தில் உயர் மின்னழுத்த கம்பி மற்றும் மின் கோபுரங்கள் அமைந்துள்ள வீட்டுமனை பிரிவிற்கு அங்கீகாரம் வழங்ககூடாது என்று அரசு விதிமுறை கூறுகிறது பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை மூலம் அளவீடு செய்யப்பட்டு மீட்கபட்டது.
நிலங்களை அழித்து வருகிறார். உவர்மண் ஒரு விவசாய நிலத்தில் கொட்டப்படுமானால் அருகில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலத்தில் உவர்ப்பு தன்மை அதிகமாகி அதில் சரியான விளைச்சல் இல்லாமல்
இறச்சகுளம் துவாரகா நகர் வழியாக செல்லும் பாசன கால்வாய் மற்றும் புத்தேரி ஆனைபொத்தை அருகில் உள்ள பீசாத்தி ஓடை போன்ற இடங்களில் ஆக் கிரமிப்பு கள் உள்ளது எனவேவிவசாயிகள் தங்கு தடையின்றி விவசாயம் செய்ய மீண்டும் அரசு புறம்போக்கு இடங்களை மீட்டு நஞ்சை விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத அளவிற்கு சுற்றி எழுப்பப்பட்டுள்ள சுற்று சுவரை அகற்றி அகற்றி பாசனக் கிளை கால்வாய்களை மீட்டு தங்கு தடையின்றி விவசாயம் செய்ய குமரி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இறச்ச குளம் பகுதியில் உள்ளவயல்களில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்