அரியலூர்,நவ;15
அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு மருத்துவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், சென்னை கிண்டியில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவச் சங்க மாவட்டத் தலைவர் கொளஞ்சிநாதன் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை மருத்துவ அலுவலர் பானுமதி தலைமை வகித்தார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்