நாகர்கோயில் செப்- 02 ,
கன்னியாகுமரி மாவட்டம். கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் நாகர்கோவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டதோடு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நாகர்கோவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி சமையறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறியப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தெரிவித்தார்கள்.
நடைபெற்ற ஆய்வில் துறை அலுவலர்கள் மருத்துவர்கள். செவிலியர்கள். பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.