ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், தோட்டக்கலைத் துறை சார்பில் ” தோட்டக்கலை உற்பத்தியை வேகப்படுத்தல்” தலைப்பில் இரண்டு நாட்கள் தேசிய மாநாடு வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் மாநாட்டை தொடக்கி வைத்தார். துணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் , பதிவாளர் முனைவர் வெ.வாசுதேவன், மற்றும் விருதுநகர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் சுபா வாசுகி வாழ்த்துரையாற்றினர்.
தலைமை விருந்தினராக கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக டீன் முனைவர் பி.ஐரீன் வேதமணி கலந்து கொண்டு,
இணைச்சேர்க்கை விதைகள், நானோ பொருட்கள் மூலம் பொருத்தமான பேக்கேஜிங், நீர் சேமிப்பு முறைகள் மற்றும் உரம் பயன்பாட்டை குறைப்பது போன்ற தலைப்புகளில் உரையாற்றினார். மேலும், “விவசாயிகளின் பாரம்பரிய அறிவையும் தேவைகளையும் ஆராய்ச்சித் தலைப் புகளாக தேர்வு செய்ய வேண்டும்” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மாநாட்டின் “ஆராய்ச்சி கட்டுரை மலரை” வெளியிட்டு, விவசாயிகளுக்கு தேங்காய் மரக் கன்றுகளை வழங்கினார்.
துறைத்தலைவர் எஸ்.விஜயகுமார் நிபுணர்களை அறிமுகப்படுத்தினார். டீன் டி.சிவகுமார் மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளளை விளக்குகையில், 175 ஆராய்ச்சி கட்டுரைகள் பெறப்பட்டு, 150 விவசாயிகள் மற்றும் 120 நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்றார். சியுடி, ஐகார், சிஏயு, இம்பால், கேஎல்டிஎஸ்ஹெச்யு, தெலுங்கானா மற்றும் நாடு முழுவதிலுள்ள பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றன.
பி.பாண்டியராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
டிஏஎன்யு பேராசிரியர்கள் ஆர்.ரிச்சர்டு, ஆர்.பாலகும்பகான்,
ஐகான் நிறுவன ஆராய்ச்சியாளர்கள்
ஏ.மோகனசுந்தரம், கலைவண்ணன், வேலுசாமி, ஜே.ராம்குமார் , திராட்சை ஆராய்ச்சி நிறுவனநிபுணர்வி.ஜகதேஸ்வரி , விஞ்ஞானி வி.சுந்தரசன் மற்றும் பேராசிரியர் கே.ஆர்.ராஜதுரை ஆகியோர் பேசினர்
வி.விஜயா பிரபா நன்றி கூறினார். வேளாண்மை தோட்டக்கலைப் பள்ளியின் அனைத்து பேராசிரியர்கள் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் தனர்.