எம்ஜிஆர் 108 வது பிறந்த தினம் : தாமரைக்குளத்தில் அஇஅதிமுக பாசறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை :
தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள தாமரைக்குளம் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் வழிகாட்டுதலின் படி, ஒன்றிய செயலாளர் அன்ன பிரகாஷ், தேனி நகர் கழக செயலாளர் கிருஷ்ணகுமார் ஆலோசனைப்படி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் கழக நிறுவன தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்களின் 108 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. தாமரைகுளம் வ.உ.சி. சிலை அருகே எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு தேனி கிழக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர், கழகத்தின் போர்வாள் அப்பாஸ் மைதீன்,தலைமையில்மாலை அணிவித்து புகழ்அஞ்சலி செலுத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்வில், மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தவமணிகருப்பசாமி, பேரூர் கழக செயலாளர் மனோகரன்,ஒன்றிய துணை செயலாளர் செல்லப்பாண்டி, மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளர் தண்டபாணி, தாமரைக்குளம் 14 வது வார்டு கவுன்சிலர் பாலமுருகன் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பார்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணியினர்,கழக தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.