நாகர்கோவில் செப் 6
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு தாழக்குடியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பசிலியான் நசரேத், ராஜன், சாந்தினிபகவதியப்பன், அக்சயாகண்ணன், ஜெயசுதர்சன், வழக்கறிஞர் ஜெயகோபால், வழக்கறிஞர் முருகேஷ்வரன், ஜெபின் விசு, ரபீக், பிரம்மநாயகம், ரோகிணி அய்யப்பன், ஞாலம் ஜெகதீஷ், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.