பரமக்குடி, ஜன. 28: நிரந்தர பணி மற்றும் யுஜிசி சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பரமக்குடி மகளிர் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றக்கூடிய கௌரவ விரிவுரையாளர்கள், தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரி கௌரவ விரிவாளர்கள் சங்கத்தினர் நீதிமன்ற தீர்ப்பின்படி யுஜிசி நிர்ணயம் செய்த ரூபாய் 50,000 சம்பளம் வழங்க வேண்டும், கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பு புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பரமக்குடி அரசு மகளிர் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சார்பாக பணி பாதுகாப்பு, யுஜிசி சம்பளம் ரூபாய் 50,000 நீதிமன்ற தீர்ப்பின்படி நடைமுறைப்படுத்த வேண்டும், ,சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பட விளக்கம். பரமக்குடி அரசு மகளிர் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.