திருப்பூர் அக் 05,
121வதுபிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரன் பிறந்நாளை முன்னிட்டு, திருப்பூர் இரயில் நிலையம் அருகேயுள்ள திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நெஞ்சை நிமிர்த்தி வீறுநடை போட்ட வரலாற்று நாயகன் திருப்பூர் குமரன்..
ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் ஆங்கிலேய போலீசாரால் திருப்பூர் குமரன் கடுமையாக தாக்கப்பட்டார். அடிபட்டு கீழே விழுந்த போதிலும், தனது கையில் அவர் வைத்திருந்த கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தார். இதன் காரணமாக அவர் “கொடிகாத்த குமரன்” என்று அழைக்கப்பட்டார். இன்று அவரின் 121வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் வர்த்தக அணி பிரிவு திருப்பூர் மாநகர மாவட்ட பொருளாளர்
திரு. ராகுல் அரஃபாத், திருப்பூர் கொடிகாத்த குமரன் அறக்கட்டளை தலைவர் டாக்டர் பிரபு திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.