மதுரை ஜூன் 24,
மதுரையில் இல்லம் தேடிக் கல்வி மதுரை மாவட்டம் பில்லர் மையத்தில் இல்லம் தேடிக் கல்வி 2024 -25 ஆம் கல்வி ஆண்டிற்கான தன்னார்வலர் பயிற்சிக்கான மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவிலான பயிற்சியை இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது முதல் கட்ட பயிற்சியை இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அலுவலர் இளம் பகவத் இந்திய ஆட்சிப் பணி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். அதற்கு முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா வரவேற்பு உரை ஆற்றினார்கள் தொடக்க நிலை தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் பயிற்சி வழங்கப்பட்டது. 18 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ,மாவட்ட மற்றும் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் 250 நபர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டனர். மதுரை மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் கார்மேகம் மற்றும் சரவணன் முருகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.