வேலூர்=28
வேலூர் மாவட்டம் ,வேலூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் கட்டுமானம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி 2024 வேலூர் சங்கமம் திருமண மண்டபத்தில் வேலூர் சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் தலைவர் பொறியாளர் எம்.இ.வி.வேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். உடன் செயலாளர் எம்.சுரேஷ் . பொருளாளர் எஸ். கருணாமூர்த்தி, தனலட்சுமி சானிடரி வேர்ட்ஸ் வித் கஜாரியா டைல்ஸ் உரிமையாளர்கள் நந்தீஸ் சுரானா,வியூ சூரானா, விபுல் சுரானா ,கஜாரியா ஜெனரல் மேனேஜர் லோகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.2024 டிசம்பர் 27 28 29 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் . பல்வேறு நிறுவனங்களின் கட்டுமானம் சார்ந்தவைகளும் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.