கிருஷ்ணகிரி, மே. 22-
கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் அமைந்துள்ள, புனித சூசையப்பர் ஆலயத்தின் தேர் திருவிழா, கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து நாள்தோறும் ஆலயத்தில் பங்கு தந்தை தலைமையில், அருள்தந்தையர்கள் ஆல்வின் குமார், பெனடிக்ட் அரோக்கியராஜ், ஸ்டான்லி அலெக்ஸ் ஆகியோரின் கூட்டு திருப்பலியும், மறையுரையும் நடைபெற்று வந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி, வான வேடிக்கையுடன் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சூசையப்பரின் திருத்தேரினை, அருட்தந்தை ஜேம்ஸ் மந்தரித்து, தேர்பவனியை துவக்கிவைத்தார். பின்னர் ஆலயத்தில் இருந்து துவங்கிய இந்த தேர்பவனி, பெரியஏரிக் கோடி கிராமம் முழுவதும் சுற்றி வந்தது. அப்போது பக்தர்கள், திருத்தேரின் மீது உப்பு, மிளகுகளை தூவி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த தேர் திருவிழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, சூசையப்பரிடம் மொழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் புனித சூசையப்பர் தேர் திருவிழா
Leave a comment