நாகர்கோவில் – மார்ச் – 13,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலணி அடுத்த கீழ குஞ்சன் விளை ஊர் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் நேற்று மாசி மாத திருவிழா நடைபெற்றது.
மாசி மாத திருவிழாவினை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பாலமுருகருக்கு அபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்பு பக்தர்களின் பஜனை . நிகழ்ச்சியும் காலை 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் ஒரு மணிக்கு நாகர்கோவில் மாநகராட்சி 11- வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீ லிஜா அன்னதானத்தை துவங்கி வைத்தார். மீண்டும் மாலை நான்கு மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறுவர் சிறுமியருக்கான விழையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மாலை ஆறு மணிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பஜனை நிகழ்ச்சியும் தீபாராதனையும் , இரவு ஏழு மணிக்கு முருகப்பெருமான் மயூர வாகனத்தில் கீழ குஞ்சன் விளையிலிருந்து புறப்பட்டு ஒத்தக்கடை சந்திப்பு வரையிலும் வீதி உலா நடைபெற்றது. வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் முருகபெருமானுக்கு மலர் மாலை, மற்றும் பன்னீர் , அபிஷேகங்கள் மற்றும் அர்ச்சனை செய்தனர் . இரவு எட்டு மணிக்கு உற்சவருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறுவர் சிறுமியருக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கணேசமணி மருத்துவ மனை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் . ரெகுராம் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மாசி மாத திருவிழா ஏற்ப்பாடு ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.