ஆரல்வாய்மொழி, ஜன.15:
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் மறைச்சாட்சி புனித தேவசகாயம் பெரும் விழா
கோட்டாறு மறை மாவட்டம் மேதகு ஆயர் நசரேன் தலைமையில் பெரும் விழா திருப்பலி நடைபெறுகிறது.
ஆரல்வாய்மொழி, கோட்டாறு மறை மாவட்டம், காற்றாடிமலை தேவசகாயம் மவுண்டில் புகழ்பெற்ற புனித வியாகுல அன்னை மறைச்சாட்சி புனித தேவசகாயம் இரட்டை திருத்தலம் உள்ளது.இந்த இரட்டை திருத்தலத்தில் மறைசாட்சி புனித தேவசகாயம் பெருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறது. நேற்று முன்தினம்
14ஆம் தேதி காலை 5 மணிக்கு திருப்பள்ளியும் காலை 10 மணிக்கு திருப்பயணிகள் திருப்பலியும் மதியம் ரெண்டு மணிக்கு சிறைச்சாலையிலிருந்து புனித மலைக்கு கிராத்தடி பயணமும் நடைபெற்றது மாலை 3 மணிக்கு மலைவலம் நிகழ்ச்சியும் ,மாலை 5 மணிக்கு புனிதரின் நவநாள் நிகழ்ச்சியும் மாலை 5.30 மணிக்கு கோட்டாறு மறை மாவட்டம் மேதகு ஆயர் நசரேன் தலைமையில் பெரும் விழா திருப்பலி நடைபெறது.இரவு 7.30 மணிக்கு புனிதரின் தேர்ப்பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார முதன்மை அருட்ப பணியாளர் அருட்பணி ராஜன் மற்றும் தேவசகாயம் மவுண்ட் அதிபரும், பங்குத்தந்தையுமான அருட்பணி லியோன் கென்சன்,ஆற்றுப்படுத்துதல் பொறுப்பாளர் அருட்பணி ஐசக் ரவி,இணை பங்குத்தந்தை அருட்பணி சலீன்ஜாண்,திருத்தொண்டர் யேசு பிரவீன், அருள் சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை துணை தலைவர் சிலுவை தாசன், செயலர் டேவிட், துணை செயலர் செலின், பொருளர் ஜெனட்சதீஷ்குமார் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.