ஈரோடு ஆக 12
ஈரோடு மாநகர் மாவட்டம் இந்து அன்னையர் முன்னணி சார்பாக ஆடி வெள்ளியை யொட்டி ஈரோடு காரை வாய்க்கால் சின்ன மாரியம்மனுக்கு புனித மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
இதன் பிறகு சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் 250 க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு கள்ளுக்கடைமேடு
ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சில பெண்கள் அம்மன் வேடத்தில் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சி
இந்து முன்னணி ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் மாவட்ட பொது செயலாளர் கார்த்தி முன்னிலையில் நடைபெற்றது.
இந்து முன்னணி மாநில பேச்சாளர்
சிங்கை பிரபாகரன் சிறப்புரையாற்றினார் ,
மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. கே . சரஸ்வதி அவர்கள் ஊர்வலத்தை துவக்கி வைத்தார் மற்றும்
இந்த ஊர்வலத்தை இந்து அன்னையர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் , இந்து அன்னையர் முன்னணி நகரத் தலைவி ஜெயமணி நகர பொதுச்செயலாளர் பூர்ணிமா ஆகியோர் முன் நின்று வழி நடத்தினார்கள்.
இதில் ஏராளமான பொதுமக்கள் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட நகர் ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .