ஊட்டி. ஜன. 14.
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள், ஓட்டல்கள், மற்றும் எப். எல் 3ஏ. ஆகியவற்றில் வரும் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை ஒட்டி ஜனவரி 26. அன்று எவ்வித மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், கிளப்புகள், ஹோட்டல்கள், பார்கள், தமிழ்நாடு ஹோட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மேற்படி தினத்தில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லற விற்பனை கடைகள் கிளப்புகள் ஓட்டல் பார்கள், தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி எவரேனும் மது வகைகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மது விற்பனை உரிமை தாரர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் மீது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 மற்றும் சம்பந்தப்பட்ட இதர விதிகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி நாளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், ஹோட்டல்கள், பார்கள் உள்ளிட்டவைகள் திறந்து இருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தறும் பட்சத்தில் அந்த விவரத்தை கூடுதல் எஸ். பி. மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை உதவி ஆணையர் ஆயம். 0423 -2234211, 0423- 2223802. மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர். 0423- 2234211 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் இவ்வாறு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.