திண்டுக்கல்
ஜுலை:10
திண்டுக்கல் பட்டேல் ஹாக்கி அகாடமி சார்பில் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு ஹாக்கி உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் ஹாக்கி பயிற்சி முகாம் துவக்க விழா நிகழ்ச்சி திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள ராமையன்பட்டி ஹோலி கிராஸ் பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பட்டேல் ஹாக்கி அகாடமி செயலாளர் மனித நேயம் வி.ஞானகுரு தலைமை தாங்கினார். ஹோலி கிராஸ் பள்ளியின் முதல்வர் அமலா ஆண்டனி வரவேற்பு உரையாற்றினார். மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் துணைத் தலைவர் ஜி. சீனிவாசன், மாவட்ட ஹாக்கி சங்க உதவிச் செயலாளர் எல்.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கத்தின் தலைவர் நாட்டாண்மை டாக்டர்.என்.எம். பி. காஜாமைதீன் கலந்து கொண்டு ஹாக்கி பயிற்சி முகாமை துவக்கி வைத்து ஹாக்கி உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் முடிவில் ஹோலி கிராஸ் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்
தி.பாஸ்கர் நன்றி கூறினார்.