இந்து அறநிலையத்துறை ,மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வருகிற 7ம் தேதி ஆர்ப்பாட்டம்…!
அனுமதி வழங்ககோரி போலீஸ் ஸ்டேஷனில் மனு
கன்னியாகுமரி,அக்.5-
கன்னியாகுமரி பகவதியம்மன் திருக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா , நவராத்திரி என இரு திருவிழாக்கள் நடைபெறுகிறது.இதில்,நவராத்திரி விழா பத்து நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் .
இந்த திருவிழா காலங்களில் விவேகானந்தபுரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவில் சர்க்கரை தீர்த்த கிணற்றிலிருந்து புனித நீர் யானையில் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வது மற்றும் ஊர்வலத்திற்கு யானை பயன்படுத்துவது ஐதீகம்.கடந்த வைகாசி திருவிழாவிற்கு யானை வரவழைக்கபடவில்லை.அது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த திருதிருவிழாவிற்கு யானையை வரவழைக்க வேண்டும் என பக்தர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் மற்றும் தேவசம்போர்டு இணை ஆணையருக்கு மனு வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் முதல் நவராத்திரி திருவிழா தொடங்கிய நிலையில்,இந்த ஆண்டும் யானை வரவழைக்கபடவில்லை.
இதனால் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் யானைக்கு அனுமதி வழங்க கோரி வரும் 7-ம் தேதி கன்னியாகுமரி ரவுண்டானாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஆர்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு கிராங்களை சேர்ந்த ஊர் தலைவர்கள், பொதுமக்கள், பக்தர்கள் நேற்று மாலை கன்னியாகுமரி காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது; அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்குட்பட்ட இந்து கோயில்களின் ஊர் கமிட்டி மற்றும் பகவதியம்மன் பக்தர்கள் இணைந்து வருகிற ஏழாம் தேதி காலை 10 மணிக்கு கன்னியாகுமரி காவல் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் நவராத்திரி திருவிழாவிற்கு பாரம்பரிய முறைப்படி தீர்த்தம் எடுக்க யானையை கொண்டு வராத இந்து சமய அறநிலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.