நாகர்கோயில், மே- 21,
கன்னியாகுமரி மாவட்டம் ஆலங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் ஹிந்து சேனை நலச்சங்கம் ராணுவ மற்றும் துணை ராணுவ வீரர்களின் கூட்டமைப்பு சேனையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஹிந்து தர்மத்திற்கு சேவையாற்ற அர்ப்பணிப்பு எண்ணம் கொண்ட முன்னாள் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் இவ் அமைப்பின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்குதல் , சமய மாநாடு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆலங்கோடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் கலையரங்கில் வைத்து நடைபெற்றது.
குமரி இந்து சேவா குடும்ப உறுப்பினர் வளர்ச்சி வேண்டி ஆலங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது , அதன் பின்பு இந்து சமய மாநாடும், வயதிற்கு மூத்த சேனையின் துணைவியர்கள் குத்துவிளக்கு ஏற்றினர் சமய வகுப்பு மாணவர்கள் இறைவணக்கம் பாடினர், சுரேஷ் சேனை வரவேற்புரை ஆற்றினார், பிரேம் சங்கர் சேனை தலைமையுரை ஆற்றினார், ஏக தர்மகர்த்தா ஹிந்து தர்ம வித்யா பீடம் வெள்ளி மலை சுவாமி சைதன்யானந்த ஜி மகாராஜ் ஆசியுரை வழங்கினார், ஹிந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் ஜி, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, பாஜக பொருளாதாரப் பிரிவு மாவட்ட தலைவர் ஜவான் ற்றி. ஐயப்பன் , மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு விஷ்வ ஹிந்து பரிஷத் வழக்கறிஞர் எல். ஆர் பிரதீப் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கொக்கோட்டு மூலை கிருஷ்ணகுமார் ஜி சேனை ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார், சேனை உறவின் குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் அதனை தொடர்ந்து 101 ஏழை குழந்தைகளுக்கு கல்வி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது, சேனையின் ஓய்வு பெற்ற ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியும் 2023 ஆம் ஆண்டு வித்தியா ஜோதி பட்டம் பெற்ற ஆசிரியர்களை கௌரவிக்கப்பட்டது,
அரவிந்த் குமார் சேனை நன்றியுரை ஆற்றினார் சிறப்பு விருந்து அனைவருக்கும் உபசரிக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் சேனையின் குடும்ப உறுப்பினர்கள் என ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.