சங்கரன்கோவில்
ஓன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் பள்ளிக்கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குவோம் என்று மிரட்டி, தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை முழுமையாக நிறுத்தி வைத்திருக்கிறது. இந்தித் திணிப்பை ஒரு போதும் ஏற்க மாட்டோம்’ என்று கழகத்தலைவர் முதல்வர் முக ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்தித் திணிப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ளும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணைந்து எதிர்த்து வந்திருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக மும்மொழி கொள்கையை எதிர்த்து சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் ரயில் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் இந்தி எழுத்துக்கள் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சரவணன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் , மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் முருகன், தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜவேல் ரத்தினம், மாணவர் அணி துணை அமைப்பாளர் வீரமணி, வார்டு செயலாளர் வீரா, மற்றும் ரகுமான், தொமுச காந்திமதி நாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்