நீலகிரி. நவ.15
நீலகிரி மாவட்ட சர்வதேச உரிமை கழகத்தின் சார்பில் மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உறுப்பினர் சேர்க்கும் முகாம் ஊட்டி பகுதியில் உரிமை கழக மலைவாழ் மக்களின் மாவட்ட தலைவ ஜெனிதா தலைமையில் உறுப்பினர் படிவம் வழங்கி சர்வதேச உரிமைக் கழக உறுப்பினராக சேர்க்கும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் நீலகிரி மாவட்ட தலைவர் குமார், துணைத் தலைவர் விஜயன், மகளிர் அணி அல்லிராணி, சர்மிளா மற்றும் சர்வதேச உரிமை கழக மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சர்வதேச உரிமை கழகத்தின் உறுப்பினர் சேர்க்கும் பணி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சி பகுதிகளிலும் நடைபெறும் என உரிமை கழகத்தின் மாவட்ட தலைவர் குமார் தெரிவித்தார்.