திருப்பூர் ஜூன்: 10
மாநகராட்சிமேயர் ந.தினேஷ்குமார் மற்றும் ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் தலைமையில் உயர்கல்வி ஆலோசகர் கலைமணி முன்னிலையில் தெற்கு ரோட்டரி மஹாலில் மாநகராட்சி சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். உடன் உதவி ஆணையாளர்கள் (மண்டலம்1&2) முருகேசன்,(மண்டலம் 3&4) ஆர்.வினோத், தொழில்துறை பயிற்சி நிறுவன முதல்வர் பிரபு ITI, பாரதியார் பல்கலைக்கழக கல்வி ஆலோசகர் கௌதம், கல்விக்குழு தலைவர் மற்றும் 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திவாகரன், 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சாந்தாமணி உட்பட பலர் உள்ளனர்.