மதுரை ஜூன் 20,
மதுரை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி மதுரை முதன்மை கல்வி அலுவலக கூட்ட அரங்கில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா. கார்த்திகா தலைமையில் நடைபெற்றது. பயிற்சியில் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மதுரை கல்லுப்பட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கமலக்கண்ணன் பயிற்சியை ஒருங்கமைத்தார். மதுரை பேரையூர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாண்டியன் வெள்ளாளப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கரலிங்கம் மதுரை சமுதாயக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மீனாட்சி கல்லூரி பேராசிரியர்கள் பயிற்சியளித்தனர்.