ராமநாதபுரம், ஜுலை 24-
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் மதினா வீதியில் வசித்து வரும் சௌகத் அலி மனைவி சுபுஹானி பேகம் கடந்த 16.8.2021 அன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மற்றும் கோட்டாட்சியரிடம் தனது மகன் முகமது பைசல் கான் தனது சொத்துகளை ஏமாற்றி பறித்துக் கொண்டதாக கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் முகமது பைசல் கான் வாங்கிய சொத்துக்களை சுபஹானி பேகத்திடம் வழங்க வேண்டும் என்று உத்தரவு வழங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து முகமது பைசல் கான் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தார். முகமது பைசல் கான் சார்பில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிலுக வயல் சரவணன் வாதாடினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளி சங்கர் “சுபஹானி பேகம் கொடுத்த புகார் பொய் புகார் என்று தெரிய வந்ததால் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோட்டாட்சியர் 16.8.2021 அன்று வழங்கிய தீர்ப்பை மாண்புமிகு நீதி அரசர் முரளி சங்கர் 25.6.2024 அன்று அதிரடியாக ரத்து செய்து முகமது பைசல் கான் வாங்கிய சொத்துக்களை திரும்பி வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியருக்கும் ஆர்எஸ் மங்கலம் சார் பதிவாளருக்கும் உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பு ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.