விவசாயிகளை தொடர்ந்து குறி வைக்கும் யானை கூட்டங்கள் – பூதப்பாண்டி – ஜனவரி -20 – பூதப்பாண்டியை சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் மலையோர கிராமங்களாக இயற்க்கை ரம்மி யத்துடன் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென நெல்,வாழை, மரச் சீனி கிழங்கு, தென்னை, மா போன்றவைகளாக காட்சியளிக்கும் ஒரு இடமாக இருந்து வருகிறது இங்கு பெரும்பாலும் மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகிறார்கள் திடல், கடுக்கரை , காட்டு புதுர், தெள்ளாந்தி, சீதப் பால் போன்ற பகுதிகளில் அதிக அளவில் காட்டு பன்றிகள் நடமாட்டம் இருப்பதால் நெல்வயல்களை அறுவடைக்கு முன்பே இவைகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வந்து அழித்து வந்தது இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டு நெல் விவசாயத்திலிருந்து வாழை மற்றும் தென்னை பயிர் செய்ய ஆரம்பித்து பயிர் செய்து வருகிறார்கள் இந்த மலையோர பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் யானை கூட்டம் வந்து ஆங்காங்கே உள்ள மரங்களை அழிப்பதும் வேரோடு பிடுங்கி எறிந்து நஷ்டமும் ஏற்படுத்தி வந்தது அந்த காலகட்டங்களில் விவசாயிகள் இரவு நேரங்களில் முழித்து இருந்து அந்த யானைகள் மற்றும் பன்றிகள் வராத அளவிற்க்கு தீ மூட்டியும் , இரும்பு தகரங்களால் சத்தம் எழுப்பியும் பயிர்களை வனத்துறை உதவியுடன் பாதுகாத்து வந்தார்கள் ஆனால் சமீப காலமாக இந்த யானை கூட்டங்கள் தாடகை மலையடிவார மானகடுக் கரை, திடல், தெள்ளாந்தி மற்றும் சீதப் பால் போன்ற பகுதிகளில் மாதம் ஒரு நாள் ஒரு இடம் என தேர்வு செய்து வாழை மற்றும் தென்னை மரங்களை அழித்து விட்டு அந்த இடத்திலேயே நின்று கொண்டு இருந்தது இதனையடுத்து விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்ல கூட வனத்துறையினுடைய உதவியை நாட வேண்டியாயிற்று மேலும் இந்த இழப்பிற்க்கு மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் முழுமையான இழப்பீடு தொகை கிடைக்காமல் வேதனையில்இருந்து வருகிற நிலையில் நேற்று முன்தினம் இரவு திடல் பகுதியை ஒட்டியுள்ள ஆவுடையார்குளம் பகுதியில் நெல் விவசாயம் செய்து வரும் இராமலிங்கம் என்பவருடை ய வயல் அருகே சுமார் 20 ஏக்கர் அருவடைக்கு தயார் நிலையிலுள்ள நெல் பயிரையும், மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான சுமார் 40 தென்னை மரங்களையும் ,வசந்தகுமார் என்பவருக்கு சொந்தமான சுமார் 250 வாழை மரங்களையும் அழித்து நாசம் செய்துள்ளது இந்த தகவலறிந்து வருவாய் துறையினர், வேளாண் துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடம் வந்து பார்வையிட்டு இழப்பீடுகள் குறித்தும் யானை வராமல் பாதுகாப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறார்கள்
விவசாயிகளை தொடர்ந்து குறி வைக்கும் யானை கூட்டங்கள்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics