திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பூர் கிராமத்தில் தந்தை போதைக்கு அடிமையாகி கைவிடப்பட்ட நிலையில் தாயின் பாதுகாப்பில் வளர்ந்து வந்த ஒன்றரை வயது பெண் குழந்தை சமீபத்தில் தாயும் இறந்து போன நிலையில் பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை கட்சி நிர்வாகிகள் மூலமாக தெரிந்து கொண்ட மனிதநேயர் சமூக சேவகர் தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர். ஆர் குட்டி என்கிற பிரகாசம் தனது கட்சியை சேர்ந்த கடம்பத்தூர் ஒன்றியம்
மேற்கு மாவட்டம் பாஸ்கர் கார்த்திக் சதீஷ் ஆகியோர் ஏற்பாட்டில் கடம்பத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் சுதாகர் சிலம்பரசன் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் குழந்தைக்கும் அதன் பாட்டிக்கும் தேவையான அரிசி மளிகை பொருட்கள் மற்றும் குழந்தைக்கு தேவையான உடை வாங்கித் தந்து ஆறுதல் கூறினர்.
அதன் பின்னர்
மாவட்டத் தலைவர் பேசுகையில்
தமிழக வெற்றி கழக நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆலோசனையின் படியும் எங்களால் இயன்றதை தொடர்ந்து செய்வோம் நாங்கள் இருக்கிறோம் என்று கூறினார் இந்த சேவையானது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.