நாகர்கோவில் ஜூன் 21
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவீரமடைந்ததை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதன் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒரு வாரத்துக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் ஆரல்வாய்மொழி பூதப்பாண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இரவு விடியவிடிய ஒரு சில இடங்களில் கன மழையும் மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது – மாவட்டத்தில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 62 மிமீ மழை பதிவாகியுள்ளது – இதே போல் தக்கலையில் 50 மிமீ மழையும், பெருஞ்சாணியில் 45 மிமீ மழையும், முள்ளங்கினாவிளையில் 44 மிமீ மழை பதிவாகியுள்ளது இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் நீர் பிடிப்பு பகுதிகளிலிருந்து முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பறை அணையின் நீர்மட்டம் 44.42 அடியாகவும் அணைக்கு வினாடிக்கு 653 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணையில் இருந்து வினாடிக்கு 637 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. இதே போன்று 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.07 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 345 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.