திருப்புவனம் அக்டோபர் 28
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வழியாக வைகை ஆறு ஓடுகிறது இந்த வைகை ஆற்றின் பாசனத்தில் வலது புறத்திலும் இடது புறத்திலும் அதிகமான கண்மாய்கள் உள்ளது.
இதில் இடது பக்கம் உள்ள கணக்கன்குடி கண்மாய் வைகை ஆற்று நீர் வராமலே தற்போது பெய்த மழை நீரினாலும் மடப்புரம் கம்மாயிலிருந்து வரக்கூடிய நீரினாலும் நிறைந்துள்ளது. இதனால் அதை பொதுபணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு அந்த கண்மாயின் மதகுகளை திறந்து விட முயற்சி செய்துள்ளனர். ஆனால் மதகுகள் சரிவர பராமரிக்கப்படாததால் ஒரு கண் மதகு உடைந்துள்ளது.
மேலும் குறிப்பிட்ட ஒரு சில நபர்களுக்காக அதிகாரிகள் செயல்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த மதகு உடைந்துள்ள சூழ்நிலையில் இனிமேல் கண்மாயில் விவசாயத்திற்காக தண்ணீர் சேமிப்பது மிகவும் கடினம் எனக் கூறி இங்குள்ள மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் எங்களுடைய ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விடுகிறோம் என்று மன
வேதனையுடன் கூறுகின்றனர். மேலும் அந்த உடைப்பை சரி செய்ய கிராம மக்களே முயற்சி செய்து வருகின்றனர்.