சுசீந்திரம். அக்.28
குமரி மாவட்டம் சுசிந்திரம் பழைய ஆற்றில் பெரு மழை காலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் தற்போது மழைக்காலம் என்பதால் பெருமழை வந்தால் வெள்ளம் வடிந்து ஓடுவதற்காக ஆற்றில் செடி கொடிகள் ஆகாய தாமரை ஆகியவை அடைத்து வெள்ளம் செல்ல முடியாமல் தடைப்பட்டு வெள்ளம் வழிந்து ஓட முடியாத சூழ்நிலை ஏற்படும் இதனால் அவற்றை தூர் வருவதற்காக பொதுப்பணித்துறை மூலம் ஜே சி பி இயந்திரம் கொண்டுவரப்பட்டு ஆற்றின் கரையோரத்தில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தினர் மேலும் ஆகாய தாமரை ஆற்றின் நடுவே இருந்ததால் அவற்றை அப்புறப்படுத்த சிறு ரக படகை கொண்டு வந்து ஆகாயத்தாமரையை அகற்றினர்.