நாகர்கோவில் – அக் – 24,
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறியதாலும், தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்
மத்திய கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று அது புயலாக உருமாறியதாலும், தென் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு கழற்சி காரணமாகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முழுவதும் கன மழை பெய்தது… நாகர்கோவில். சுசீந்திரம், அஞ்சு கிராமம். மயிலாடி, திங்கள்நகர் , மார்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது… இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தததால் வாகன ஒட்டிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.