நாகர்கோவில் செப் 26
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில், நேற்று நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, வீயனூரைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் அபாயகரமாக குடிபோதையில் ஓட்டி வந்த கனிமவள லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அதிக பாரம் ஏற்றுவதற்காக, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் உயரத்தில் தொட்டி கட்டி இயக்கப்பட்ட ஏழு காலி கனிம வள லாரிகள் தலா ரூ.1000 அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்பட்டன.