நாகர்கோவில் ஜூன் 13
இந்திய திருநாட்டில் மக்கள் பணி செய்திட மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்று தேசத்தை திறன் பட வழி நடத்திச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி நாட்டு மக்களுக்காக தொடர்ந்திட பாஜகவை நம்பி வாக்களித்த என் தேச உறவுகள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள். பாஜக சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா அறிக்கை.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி அரியணை ஏற வேண்டும் என்ற சிறந்த எண்ணத்துடன் பாஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பாஜக சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :-
பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் மூன்றாவது முறையாக பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர்கள் பாரதிய ஜனதா கட்சி மீது நம்பிக்கை வைத்து தங்கள் மதிப்புமிக்க வாக்குகளை பாரதிய ஜனதாவுக்கு செலுத்தி மீண்டும் ஆட்சி அதிகாரத்தை பாஜகவுக்கு வழங்கியதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள வாக்காளர் அனைவருக்கும் தமிழகத்தின் தென்கோடி முனையான குமரி முனையில் இருந்து உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது நாட்டின் வளர்ச்சி என்பது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் இல்லாமல். பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பல மடங்கு அசுர வளர்ச்சியை கண்டுள்ளது.
நம் பாரத தேசம் உள்நாட்டு உற்பத்தியில் அனைத்து உலகையும் வியப்படையை செய்துள்ளது.
மற்ற நாட்டு உற்பத்தி பொருட்களை, கண்டுபிடிப்புகளை நவீன தொழில்நுட்பங்களை அவர்களிடமிருந்து நாம் பெற்று வந்த காலம் போய். நம் கண்டுபிடிப்புகளையும் உற்பத்திகளையும் மற்ற நாடுகள் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு தேசத்தை உயர்த்தி உள்நாட்டு உற்பத்திகளை ஊக்கப்படுத்திய நமது பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சல் மிக்க தேச நலன் அனைத்து துறையினராலும் போற்றப்படக்கூடியது. இந்த வளர்ச்சியை ஏற்றுக்கொண்டு இன்னும் அதிகமான வளர்ச்சியை நம் இந்திய தேசம் காண வேண்டும் என்ற நல்ல நோக்கில் பாஜகவை ஆட்சி பீடத்தில் அமர்த்த வேண்டும் மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என எண்ணி வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு என் அன்பு கலந்த இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.