நாகர்கோவில் ஜூன் 30
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து ஆயுதப்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் வாராந்திர கவாத்து நடைபெற்றது.
இதில் காவலர்களுக்கு, ஆயுதங்களின் செயல்பாடு குறித்த வகுப்பு நடைபெற்றது. மேலும் கைதி வழிக்காவல் மற்றும் முக்கிய பிரமுகர் வழிக்காவல் அலுவலில் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் எனவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.