நாகர்கோவில் – ஆக – 21
கன்னியாகுமரி
மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து மாவட்ட திட்டக்குழு தலைவர் டாக்டர். மெர்லியன்ட் தாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் திட்டங்கள் தொடர்பான 06/2024 மற்றும் 07/2024 ஆம் மாதங்களுக்கான செலவினங்கள் மன்றம் அங்கீகாரம்
வருவாய்த்துறை திட்டங்கள்,
தென்னக இரயில்வே திட்டங்கள்,
மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் துறை குறித்தும்
சுற்றுலாத்துறை குறித்தும்,
பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதார அமைப்பு துறை குறித்தும்,
கால்நடை துறை குறித்தும்,
மாவட்ட வட்ட வழங்கல் துறை குறித்தும்,
மீன்வளத்துறை குறித்தும், விவாதிக்கப்பட்டடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மேலும் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய நான்கு வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.