குலசேகரம், டிச.12-
திருவட்டார் அருகே வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜய், இவர் மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிஷா (24). இவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் ஆற்றூர் பகுதியில் உள்ள தயார் வீட்டிற்கு சென்றிருந்தார். அவர் வீட்டில் தனியாக இருக்கும்போது முகத்தை துணியால் மூடிய மர்ம நபர் ஒருவர் வீட்டின் பின்பக்கம் வழியாக புகுந்து அனிஷா கழுத்தில் கிடந்த தங்க நகையை பறிக்க முயன்றார்.
உடனே அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் அங்கு திரண்டனர். இதை பார்த்த மர்ம நபர் தப்பி சென்று விட்டார். இது குறித்து திருவட்டார் போலீசில் அனிஷா புகார் செய்தார். போலீசார் மர்ம நபரை தேடி வருகிறார்கள்.