சிவகங்கை ஆக:22
சிவகங்கையில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் மாவட்ட துணை அலுவலராக பணிபுரிந்தவர் நாகராஜன். இவரிடம் சிவகங்கையை அடுத்துள்ள சூரக்குளம் என்ற ஊரைச் சேர்ந்த கற்பகம்மூர்த்தி என்பவர் கோழிப் பண்ணை தொடங்குவதற்காக தடையில்லா சான்று கேட்டு மாவட்ட தீயணைப்புத் துறை மூலம்
விண்ணப்பித்து இருந்ததாக கூறப்படுகிறது. தடையில்லாச் சான்றை வழங்க கற்பகமூர்த்தியிடம் நாகராஜன் லஞ்சமாக ரூபாய் ஐந்தாயிரம் கேட்டுள்ளார் . அப்போது கற்பகமூர்த்தி
முன்பணமாக நாகராஜிடம் ரூபாய் ஆயிரம் வாங்கும் போது அவற்றை ரகசியமாக வீடியோ எடுத்து வைத்திருந்தார் .
இந்த வீடியோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கொடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது . இந்நிலையில் நேற்று (புதன்கிழமை ) கற்பமூர்த்தி லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆலோசனையோடு ரசாயனம் தடவிய 5 – ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொண்டு போய் மாவட்ட தீயணைப்பு துறையின் துணை அலுவலர் நாகராஜனிடம் லஞ்சமாக கொடுத்துள்ளார் . அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று கையும் களவுமாக நாகராஜனைப்
பிடித்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் சிவகங்கை நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.