கிருஷ்ணகிரி நவ.12,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கொடமாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முபாரக் (29). துணிக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்துவரும் இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளார். இவரது வீட்டின் அருகே உள்ள வீட்டில் 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண்ணிடம் முபாரக் நட்பாக பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தவறாக காண்பித்து, அப்பெண்ணை தனிமையில் இருக்கும்போது பலவந்தமாக கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த இளம்பெண் கர்பமடைந்துள்ளார். இளம்பெண்ணின் நடத்தையில் மாற்றம் இருப்பதை கண்ட பெற்றோர் தீர விசாரித்ததில் நடந்தவற்றை கூறியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து முபாரக்கை கைது செய்தனர். இளம்பெண்ணை மிரட்டி கர்பமாக்கிய சம்பவம் அக்கிராமத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.