சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சுந்தனேந்தல் கிராமத்திலிருந்து பரமக்குடி வரையிலான புதிய பேருந்து வழித்தடத்தினை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், காரைக்குடி மண்டல தொ.மு.ச பொதுச் செயலாளர் பச்சைமால் , காரைக்குடி மண்டல துணை மேலாளர் தொழில்நுட்ப பிரிவு தமிழ்மாறன் , வட்டாட்சியர் முருகன் , காவல் துறை ஆய்வாளர் மணிகண்டன் , பரமக்குடி கிளை மேலாளர் ரத்தினவேல், மானாமதுரை தொகுதி ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் கி.கண்ணன் , மாவட்ட பிரதிநிதி சாரதி , ஒன்றிய துணை செயலாளர் சிவனேசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா பெரியசாமி, புலியூர் நீலமேகம் , ஆழிமதுரை மலைச்சாமி, கிளைக்கழக செயலாளர்கள் மலைமேகு, ரவி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.