தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக, திருவாரூர் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
திருவாரூர்
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக, திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கோட்டூர், நீடாமங்கலம், முத்துப்;பேட்டை, திருவாரூர் ஆகிய நான்கு பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் ரூ.3.87 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள திருவாரூர் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் .கோ.பாலசுப்ரமணியன், திருவாரூர் ஒன்றியபெருந்தலைவர் தேவா ஆகியோர் குத்துவிளக்கேற்றி, புதிய அலுவலகத்தினை பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், திருவாரூர் நகர்மன்றத்தலைவர் புவனப்பிரியா செந்தில், திருவாரூர் ஒன்றிய துணைத்தலைவர் துரை.தியாகராஜன், திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், கொரடாச்சேரி ஒன்றியக்குழுத்துணைத்தலைவர் பாலசந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணகி, பிரகாஷ், வட்டாட்சியர் செந்தில்குமார், ஒன்றிய பொறியாளர்கள் சூர்யமூர்த்தி, சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து திருவாரூர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அனைத்து ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.