திருப்பூர் பிப்:23
தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நல்லூர் பகுதி கழகம் 47 வது வார்டில் விஜயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்
8-ஆம் வகுப்பு வகுப்பறை கட்டிடம் நபார்டு திட்டம்,2022 ,, 2023ன் கீழ் மதிப்பீடு ஒரு கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடத்தினை தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கடலூரில் நடைபெற்ற
அரசு விழாவில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்
க. செல்வராஜ் எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார். உடன் தெற்கு மாநகர செயலாளர்
டி கே டி நாகராஜ்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மேயர் தினேஷ்குமார் மண்டல தலைவர் கோவிந்தசாமி.
பகுதி செயலாளர் மேங்கோ பழனிச்சாமி.உசேன்.தெற்கு மாநகர விவசாய அணி அமைப்பாளர் மகேந்திரன். வார்டு செயலாளர் வெங்கட் ராஜா. மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஆனந்தி மாநகராட்சி கவுன்சிலர்கள் திவாகரன்.ஜெயசுதா பூபதி. உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் ஆசிரியர் பெருமக்கள் மாணவச் செல்வங்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்…