கன்னியாகுமரி ஜன 30
தமிழ்நாடு முதலமைச்சர் மீன்வளத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் சிற்றார் || அணையில் புதுப்பிக்கப்பட்ட மீன் பண்ணை மற்றும் மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்ததைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் தாரகை கத்பர்ட் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசுகையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக்குகென பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில், சிற்றார் || அணையில் இரண்டு மீன் பண்ணைகள் மற்றும் பேச்சிப்பாறை அணையில் ஒரு மீன் பண்ணை என 3 மீன் பண்ணைகள் தேங்காப்பட்டணம் மற்றும் குளச்சல் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் உதவி இயக்குனர்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. விளவங்கோடு வட்டம் கடையாலுமூடு கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் சிற்றார் அணை 11 அமைந்துள்ளது. சிற்றார் அணைப்பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள 22 குடியிருப்புகளில் 630 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த மீன் பண்ணை உணவு விநியோக தேவைகளை நேரடியாக பூர்த்தி செய்யவும். மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளுர் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
சிற்றார் அணை || தளத்தில், ஒரு மீன் பண்ணை மாவட்ட மீன் விவசாயிகள் மேம்பாட்டு முகமை பண்ணை என்று அழைக்கப்படுகிறது. இது 15.00 லட்சத்திற்கும் அதிகமான மீன் வளர்ப்பு திறன் கொண்டது. இந்த பண்ணைகளில், மீன் வளர்ப்பு செயல்முறை ஜூன் முதல் டிசம்பர் வரை (முக்கிய பருவம்) 4 சுழற்சிகளில் மேற்கொள்ளப்படுகிறது. சிற்றார் || மாவட்ட மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை பண்ணையில் 27 குளங்கள் உள்ளன. அவற்றில் 25 குளங்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக வேலை செய்யும் நிலையில் இல்லை. இது பண்ணையின் மொத்த மீன் வளர்ப்புத் திறனைக் குறைக்கிறது.
எனவே. தற்போது சிற்றார் அணை || இல் மாவட்ட மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை மீன் பண்ணையை புதுப்பித்தல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் பணி மீன்வளம் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் சேதமடைந்த மீன் குளங்களைச் சீரமைத்தும். உள்கட்டமைப்புகள் மேம்படுத்தவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட சிற்றார் அணை II மாவட்ட மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை மீன் பண்ணை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மீட்டர் மற்றும்
12 மீட்டர் அகலத்தில் 2 மீன் வளர்ப்பு குளங்களும், 20 மீட்டர் மற்றும் 10 மீட்டர் அகலத்தில் 5 மீன் வளர்ப்பு குளங்களும் 20 மீட்டர் மற்றும் 13 அகலத்தில் 6 மீன் வளர்ப்பு குளங்களும்10.3 மீட்டர் மற்றும் 6.2 அகலத்தில் 6 நாற்றங்கால் குளங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து அலுவலக கட்டிடம், மோட்டார் அறை மற்றும் பொதிப்பக கூடம் உள்ளிட்டவைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட சிற்றார் || மாவட்ட மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை மீன் பண்ணையின் வாயிலாக பழங்குடியின மக்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுயதொழில் வேலை வாய்ப்புகள் உருவாகும். அதன்மூலம் அவர்களின் வருமானம் அதிகரித்து, வாழ்வாதாரம் மேம்படும். மேலும் ஊட்டச்சத்து உணவு வழங்குவதன் மூலம் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். மீன் வளர்பினால் விளைச்சல் அதிகரிக்கப்படும். தொடர்ந்து சிற்றார் அணை || மற்றும் அதைச் சுற்றியுள்ள உள்நாட்டு மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பாளர்கள் மீன் வளர்ப்புக்கு எளிதாக மீன் குஞ்சுகளை வாங்க முடியும். இத்திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 12,400க்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள்.
மேலும் புதுப்பிக்கப்பட்ட சிற்றார் || மாவட்ட மீன் பண்ணைகளில் மீன் குஞ்சுகளை வளர்த்து அணைகள் மற்றும் குளங்களில் வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அதிகம் லாபம் தரும் கட்லா ரோகு, மிருதன். சாதா கெண்டை உள்ளிட்ட மீன் இனங்கள் மீன் பண்ணைகளில் வைத்து வளர்க்கப்படும். மேலும் இந்த பண்ணைகளில் ஒரே நேரத்தில் 25 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்த்து அவை அணைகள் மற்றும் குளங்களில் வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.