மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொலிக் காட்சி வாயிலாக, புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில், உயர்கல்வி துறை சார்பாக, ரூ.4 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட எட்டு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் இரண்டு ஆய்வகக் கட்டிடங்கள் மற்றும் தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ரூ.14 கோடியே 74 இலட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில், புதியதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்து, கட்டிட வளாகத்தை பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், தளி சட்டமன்ற உறுப்பினர் .டி.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா ., ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வளாகத்தை பார்வையிட்டனர்.
பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில், பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.4 கோடி மதிப்பில் 1466.10 சதுர மீட்டர் (15781.10 சதுர அடி) பரப்பளவில் எட்டு வகுப்பறை மற்றும் இரண்டு ஆய்வகக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 1 ஆய்வகம், 2 வகுப்பறைகள், முதல் தளத்தில் 1 ஆய்வகம், 2 வகுப்பறைகள், இரண்டாம் தளத்தில் 4 வகுப்பறைகள் என மொத்தம் எட்டு வகுப்பறை மற்றும் இரண்டு ஆய்வகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதேப்போல், தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ரூ.14 கோடியே 74 இலட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் 4849.37 ச.மீ (52199 ச.அடி) பரப்பளவில் புதிய கல்விசார் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 2 வகுப்பறைகள், 1 ஆய்வகம், 1 நூலகம், 1 நூலக அடுக்கறை, 1 முதல்வர் அறை, 1 மாணவர் பயன்பாட்டு அறை, 2 துறைத்தலைவர் அறை, 1 மாணவ கழிப்பறை, 1 மாணவியர் கழிப்பறையும்,முதல் தளத்தில் 6 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 1 கருத்தரங்கு கூடம், 2 துறைத்தலைவர் அறை, 2 பணியாளர்கள் அறை, 1 மாணவ கழிப்பறை, 1 மாணவியர் இயக்குநர் அறை, 2 பணியாளர்கள் அறை, 1 மாணவ கழிப்பறை, 1 மாணவியர் கழிப்பறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
கழிப்பறையும், இரண்டாம் தளத்தில், 6 வகுப்பறைகள், 3 ஆய்வகங்கள், 1 உடற்கல்வி
இந்நிகழ்ச்சியில், அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் .திருநாவுக்கரசு, பர்கூர் பேரூராட்சி தலைவர் .சந்தோஷ்குமார், பொறியியல் கல்லூரி துணை முதல்வர் .நபிஷா பேகம், வட்டாட்சியர் .பொன்னாலா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் .கார்த்திகேயன், .பி.சி.வெங்கடப்பன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் .சுபிதாபீ, முன்னாள் தளி ஒன்றிய குழு தலைவர் .சீனிவாசலு பேராசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.