மதுரை டிசம்பர் 7,
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டம் 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வழங்கி தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து மதுரை மாநகராட்சி மாநாட்டு மையத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினருக்கான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் மதுரை வடக்கு கோ.தளபதி, மதுரை தெற்கு மு.பூமிநாதன், சோழவந்தான் ஆ.வெங்கடேசன், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி ஆகியோர் உடன் உள்ளனர்.