திருப்பத்தூர்:ஜன:25, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் வாகன ஓட்டுநர்கள் தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு திருப்பத்தூர் பணிமனை கிளை மேலாளர் குமரன் தலைமை தாங்கினார்.
மேளாண் இயக்குனர் டாக்டர் குணசேகரன் உத்தரவின் பேரில், வேலூர் மண்டல பொது மேலாளர் பொது மேலாளர் கணபதி வழிகாட்டுதலில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப கலந்துகொண்டு வாகன ஓட்டுனர், நடத்துனர்களுக்கு இனிப்பு வழங்கி பேட்ச் அணிவித்தும், பூ வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க நிர்வாகிகள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என ஐம்பதற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.