திருப்பத்தூர்:ஜன:03,
திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திருப்பத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயா அருணாச்சலம் தலைமையேற்று அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டினை முன்னிட்டு காலண்டர், இனிப்பு மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் ஆணையாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பெரிய குழு பெருந்தலைவர் விஜயா அருணாச்சலம் நினைவு பரிசினை வழங்கி பேசுகையில்: மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆட்சியில் சிறப்பான திட்டங்களை செயலாற்றி வருகிறோம். மேலும் அரசு ஊழியர்களாகிய அனைவரும் இணைந்து பொதுமக்களுக்கு இந்த ஆண்டில் புதிய துவக்கத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பல்லளப்பள்ளி ஊராட்சி செயலாளர் தமிழ்வாணன் “முத்துக்கு…முத்தாக.. என்ற பாடலை பாடி நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் ஊராட்சி செயலாளர் அண்ணாமலை நன்றியுரை ஆற்றினார்.