நாகர்கோவில் அக் 31
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் :-
தீமைகள் ஒழிந்து நன்மைகள் வெற்றி பெரும் தீபாவளி தினத்தில்
அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபங்களின் திருநாளாம் இந்த நல்ல தினத்தில் நாம் அனைவரும் நன்மையை விளக்கேற்றி வரவேற்போம்.
புத்தாடை அணிந்து, இனிப்புகள் பகிர்ந்து, தீபம் ஏற்றி, பட்டாசு கொளுத்தி ஜாதி மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் இந்த திருநாளில் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி மற்றும் சமூகத்தில் எழுச்சி ஏற்பட வேண்டுமென வாழ்த்துகிறேன்,
இனிப்பாக, வண்ணமயமாக, புத்துணர்ச்சியுடன் இந்த பண்டிகை காலம் அமையட்டும். பிரிவினை மற்றும் ஏற்றதாழ்வுகளை நரகாசுரனை போல் அழித்திடுவோம்.
இருள் நீங்கி ஒளி பரவட்டும், துன்பங்கள் நீங்கி இன்பம் பரவட்டும். எல்லா நலமும் வளமும் அனைவரும் பெற வேண்டுகிறேன். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.