தருமபுரி எஸ்.வி. ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அபாய ஆஞ்சநேயர் வெள்ளி கவசத்தில் அருள் பாலித்தார். இதேபோல் மெடக்கேறி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்
சந்தன காப்பு அலங்காரத்திலும்
தொப்பூர் ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் வடை மற்றும் வென்னைகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். செக்காரப்பட்டியில் உள்ள 12 அடி ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் காட்சி வழங்கினார்.
இத்திருக்கோவிலில் ஓசூர் ஜெய் ஆஞ்சநேயா சேவா அமைப்பின் சார்பில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு எட்டாவது ஆண்டாக விழாவில் பங்கேற்ற சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், இனிப்பு மற்றும் அன்னதானம் ஆகியவை அதிகாலை முதல் மாலை வரை வழங்கப்பட்டது.